/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பெங்களூருவிலிருந்து காரில் குட்கா கடத்திய 3 பேர் கைது
/
பெங்களூருவிலிருந்து காரில் குட்கா கடத்திய 3 பேர் கைது
பெங்களூருவிலிருந்து காரில் குட்கா கடத்திய 3 பேர் கைது
பெங்களூருவிலிருந்து காரில் குட்கா கடத்திய 3 பேர் கைது
ADDED : மே 02, 2025 01:14 AM
தொப்பூர்காரில், குட்கா பொருட்கள் கடத்திய, 3 பேரை, தொப்பூர் போலீசார் நேற்று கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், தொப்பூர் வழியாக குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, தொப்பூர் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி மற்றும் எஸ்.ஐ.,க்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். நேற்று காலை, 10:30 மணிக்கு தொப்பூர் அருகே உள்ள, பப்பிரெட்டியூர் காட்டுவளவு பகுதியில், சந்தேகப்படும் படி நிறுத்தியிருந்த வோல்க்ஸ் வேகன் காரில் இருந்த, 3 பேரை பிடித்து விசாரணை செய்தனர்.
இதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள், பெங்களூருவில் இருந்து காரில் கடத்தி வரப்பட்டது தெரிந்தது. காரில், 10 மூட்டைகளில் இருந்த, 200 கிலோ எடையுள்ள, 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர். காரில் வந்த, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஜிட்டு, 24, சேலம் மாவட்டம், ஓமலுாரை சேர்ந்த பூபதி, 44, தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அடுத்த வெள்ளம்பட்டியை சேர்ந்த சேகர், 56 ஆகிய மூவரை, தொப்பூர் போலீசார் கைது செய்தனர்.