/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தெருநாய்கள் கடித்து 3 கால்நடைகள் சாவு
/
தெருநாய்கள் கடித்து 3 கால்நடைகள் சாவு
ADDED : மார் 01, 2024 02:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி:கடத்துார் அடுத்த வீரகவுண்டனுாரை சேர்ந்த மிதிலா, ராதிகா, வசந்தா ஆகியோர் ஆடு, எருமை உள்ளிட்ட கால்நடைகள் வளர்க்கின்றனர்.
நேற்று
முன்தினம் வழக்கம் போல அவர்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து
சென்று விட்டு மாலையில் வீட்டின் முன்பு கட்டியிருந்தனர்.
இந்நிலையில், சுடுகாட்டு பகுதியிலுள்ள நாய்கள், இரவில் மிதிலாவின்
எருமை கன்றுவையும், ராதிகாவின் ஒரு ஆட்டு குட்டி, வசந்தாவின் 2 ஆட்டு
குட்டிகளையும் கடித்துள்ளன.
இதில் எருமைக்கன்று, 3
ஆட்டுக்குட்டிகள் இறந்தன. வருவாய் துறையினர் விசாரிக்கின்றனர்.
நாய்களை கட்டுப்படுத்த அப்பகுதி வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

