/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
2 சிறுமிகள் உள்ளிட்ட 3 பேர் மாயம்
/
2 சிறுமிகள் உள்ளிட்ட 3 பேர் மாயம்
ADDED : மே 06, 2025 01:52 AM
தர்மபுரி:தர்மபுரி மாவட்டம், நாயக்கன்கொட்டாய் அடுத்த, வெள்ளாளப்பட்டியை சேர்ந்த, 17 வயது சிறுமி, கிருஷ்ணாபுரம் அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து முடித்துவிட்டு, வீட்டில் இருந்து வந்தார். இவர் சமூக வலைதளத்தில் வாலிபர் ஒருவருடன் பழகி வந்த நிலையில், கடந்த, 3 முதல் மாயமானார். இது குறித்து, பெற்றோர் அளித்த புகார் படி, கிருஷ்ணாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
பென்னாகரம் அடுத்த, போடூரை சேர்ந்த இந்துஜா, 19, இவர் தர்மபுரியில் உள்ள தனியார் கல்லுாரியில், 2ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த, 3 முதல் இந்துஜா மாயமானார். பெற்றோர் புகார்படி, பென்னாகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
பாலக்கோடு அடுத்த, வேடம்பட்டியைச் சேர்ந்த, 16 வயது சிறுமி, பஞ்சப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் -1 படித்து வந்தார். இவர் கடந்த மாதம் ஏப்., 30 முதல் மாயமானார். பெற்றோர் புகார் படி, பஞ்சப்பள்ளி போலீசார்
விசாரிக்கின்றனர்.