/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கல்லுாரி மாணவி, சிறுமி உட்பட 3 பேர் மாயம்
/
கல்லுாரி மாணவி, சிறுமி உட்பட 3 பேர் மாயம்
ADDED : செப் 09, 2025 02:31 AM
தர்மபுரி, தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர், 18 வயது சிறுமி. இவர், 10ம் வகுப்பு படித்து விட்டு, வீட்டில் இருந்தார், நேற்று முன்தினம் மாயமானார். பெற்றோர் புகார் படி, ஏரியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
*பென்னாகரம் அருகே ஏரிக்காடு கிராமத்தை சேர்ந்த ரீனா, 20. இவர் தர்மபுரியிலுள்ள தனியார் கல்லுாரியில் பி.காம்.,(சிஏ) இறுதி ஆண்டு படித்து வந்தார். கடந்த, 6ம் தேதி மாயமானார். பெற்றோர் புகார் படி, ஒகேனக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.
* அரூர் அடுத்த எல்லப்புடையாம்பட்டியை சேர்ந்தவர் ஏகாம்பரம், 35. இவர், அரூர் தபால் நிலையத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் காலை, 7:00 மணிக்கு தீர்த்தமலையில் உள்ள தீர்த்தகிரீஸ்வரர் கோவிலுக்கு செல்வதாக கூறிச்சென்றவர் வீடு திரும்பவில்லை. புகார் படி அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.