/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
எருமியாம்பட்டி இ.ஆர்.கே., கல்லுாரியில் 340 மாணவியருக்கு பணியாணை வழங்கல்
/
எருமியாம்பட்டி இ.ஆர்.கே., கல்லுாரியில் 340 மாணவியருக்கு பணியாணை வழங்கல்
எருமியாம்பட்டி இ.ஆர்.கே., கல்லுாரியில் 340 மாணவியருக்கு பணியாணை வழங்கல்
எருமியாம்பட்டி இ.ஆர்.கே., கல்லுாரியில் 340 மாணவியருக்கு பணியாணை வழங்கல்
ADDED : மார் 17, 2025 03:39 AM
அரூர்: அரூர் அருகே எருமியாம்பட்டியிலுள்ள இ.ஆர்.கே., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, ஓசூர் டாடா எலக்ட்ரானிக்ஸ் மற்றும் சென்னை பாக்ஸ்கான் இந்தியா நிறுவனம் இணைந்து நடத்திய வேலைவாய்ப்பு முகாம் கல்லுாரி கலையரங்கில் நடந்-தது.
முகாமை இ.ஆர்.கே., கல்வி நிறுவனங்களின் தலைவர் செல்-வராஜ் தொடங்கி வைத்தார். நிர்வாக இயக்குனர் சோழ-வேந்தன் முன்னிலை வகித்தார். என்.எஸ்.எஸ்., அலுவலர் சிவக்குமார் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் முனைவர் சக்தி தலைமை வகித்து பேசினார். முகாமில், நிறுவனத்தின் மனித வளத்துறை அலுவலர்கள் செந்-தில்குமார், சபரி, கார்த்திக், செரீப் மற்றும் குழுவினர் இணைய வழி, எழுத்து மற்றும் நேர்முக தேர்வை நடத்தினர். முகாமில் இ.ஆர்.கே., கலை,
அறிவியல் கல்லுாரியில் இறுதியாண்டு பயிலும் இளங்கலை, முதுகலை மாணவியர் கலந்து கொண்டனர்.
இதில், டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில், 165 பேர், பாக்ஸான் நிறுவனத்தில், 175 பேர் தேர்வாகி, சென்னை, ஓசூர், பெங்களூரு ஆகிய பகுதிகளில் ஆண்டு வருமானம் தலா, 2.20 லட்சம் ரூபாய் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, பணி ஆணை பெற்றனர்.
முகாமில் மருந்தியல் கல்லுாரி முதல்வர் சிவகுமார், நிர்வாக அலுவலர் அருள்குமார், அனைத்து துறைத்தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் மணி நன்றி கூறினார்.
முகாம் ஏற்பாடுகளை கல்லுாரி வேலைவாய்ப்பு மைய ஒருங்கி-ணைப்பாளர்கள் ராமமூர்த்தி மற்றும் அமுதா செய்திருந்தனர்.