ADDED : நவ 27, 2025 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மோளையானுாரில், 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றனர். கடந்த, சில நாட்களாக வெறி
பிடித்த நாய் ஒன்று தொடர்ச்சியாக, 15 பசு மாடுகளை கடித்து குதறியது. அவற்றை விவசாயிகள், மோளையானுார் அரசு மற்றும் தனியார் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர்.
அதில் மோளையானுார் உதயகுமார், வினோத், ரஞ்சிதம் ஆகியோரின், 4 பசுமாடுகள் நேற்று உயிரிழந்தன. இதை, அரூர் கால்நடை அரசு மருத்துவமனை உதவி இயக்குனர் கனகசபை, கால்நடை மருத்துவர்கள் பூபாலன், வாசன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். வெறிநாய் கடித்து பாதித்த மற்ற, 10 பசு மாடுகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

