/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
காரிமங்கலம் ஒன்றியத்தில் 4 நாள் ஒகேனக்கல் குடிநீர் 'கட்'
/
காரிமங்கலம் ஒன்றியத்தில் 4 நாள் ஒகேனக்கல் குடிநீர் 'கட்'
காரிமங்கலம் ஒன்றியத்தில் 4 நாள் ஒகேனக்கல் குடிநீர் 'கட்'
காரிமங்கலம் ஒன்றியத்தில் 4 நாள் ஒகேனக்கல் குடிநீர் 'கட்'
ADDED : ஜூன் 09, 2025 03:57 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின், சாலை விரி-வாக்க பணிகள் காரிமங்கலம் ஒன்றியத்திலுள்ள கெரகோடஹள்-ளியில் நடக்கவுள்ளது. மேலும், காரிமங்கலம் அரசினர் பெண்கள் கலைக்கல்லுாரி பைசுஹள்ளியில் உள்ள சட்டக்கல்லுாரி ஆகிய இடங்களில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பயன்பாட்டிற்-கான நடைபாதை மேம்பால பணிகள் நடக்கவுள்ளது.
எனவே அவ்விடங்களிலுள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரி-யத்தின் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குடிநீர் வினியோக குழாய்களை இடமாற்றம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், வரும், 10ல் சட்டக்கல்லுாரி, மாட்லாம்பட்டி, 13ல் காரிமங்கலம் அரசினர் பெண்கள் கலைக் கல்லுாரி, மற்றும், 16 முதல், 17ம் தேதி கெரகோடஹள்ளி ஆகிய இடங்களில், 4 நாட்கள் மற்றும் காரிமங்கலம் ஒன்றியத்திலுள்ள கெரகோட-ஹள்ளி, நாகனாம்பட்டி, அடிலம், பெரியாம்பட்டி, கோவிலுார், முருக்கம்பட்டி, இண்டமங்கலம், பைசுஹள்ளி, பூமாண்டஹள்ளி, மல்லிக்குட்டை ஆகிய ஊராட்சிகளுக்கு, ஒகேனக்கல் குடிநீர் வழங்க இயலாது. எனவே மேற்கண்ட பகுதிகளை சேர்ந்தவர்கள், இந்த, 4 நாட்களுக்கு உள்ளூர் நீர் ஆதாரங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்ப-டுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.