/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
1,096 ஓட்டுச்சாவடிகளில் 4 நாட்கள் சிறப்பு முகாம்
/
1,096 ஓட்டுச்சாவடிகளில் 4 நாட்கள் சிறப்பு முகாம்
ADDED : நவ 14, 2024 07:03 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சரயு வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, 6 சட்டசபை தொகுதிகளுக்கும் வரும், 2025 ஜன., 1ல், 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்த்துக் கொள்ளும் வகையில் வரும், 28 வரை சிறப்பு சுருக்கமுறை திருத்தம் நடக்கிறது. இதற்கான சிறப்பு முகாம்கள் வரும், 16, 17 மற்றும் 23, 24ம் தேதிகளில் (4 நாட்கள்)
கிருஷ்ண-கிரி மாவட்டத்திலுள்ள, 1,096 ஓட்டுச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாக்காளர் பட்டியில் தங்கள் பெயரை சேர்த்துக் கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.