/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
துக்க நிகழ்வில் பட்டாசு வெடித்து 4 பேர் காயம்
/
துக்க நிகழ்வில் பட்டாசு வெடித்து 4 பேர் காயம்
ADDED : பிப் 21, 2026 06:25 AM
தர்மபுரி: தர்மபுரி அருகே, குப்பூர் கிராமத்தில் துக்க நிகழ்வில், பட்டாசு வெடித்ததில் நான்கு பேர் காயமடைந்தனர்.
தர்மபுரி மாவட்டம், குப்பூர் பஞ்.,க்குட்பட்ட ஏரிக்-கோடி பகுதியை சேர்ந்த விவசாயி ராஜா, 50. இவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இவரது இறுதி சடங்கு நேற்று மதியம், 3:00 மணிக்கு ஏரி-கோடி கிராமத்தில் நடந்தது. இதில், சுற்றுவட்-டார பகுதிகளை சேர்ந்த உறவினர்கள் கலந்து கொண்டனர். இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடித்தனர். அப்போது, பட்டாசுகளை ஏற்றி வந்த ஆட்டோவில் தீப்பிடித்து, அதிலிருந்த பட்-டாசுகள் வெடிக்க தொடங்கின. இதில், சோலைக்கொட்டாயை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பழனி, 30, சின்ன குரும்பட்டியை சேர்ந்த சதீஷ், 31, கெங்கான்கொட்டாயை சேர்ந்த தங்கம், 46, வெள்ளோலையை சேர்ந்த பெரமன், 40, ஆகிய நான்கு பேர் காயமடைந்-தனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு, தர்மபுரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்-டனர். தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்-றனர்.

