sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ சுமை தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

சுமை தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

சுமை தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 21, 2026 06:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2026 06:24 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு, சுமை துாக்கும் தொழிலாளர்கள், கண்டன ஆர்ப்பாட்-டத்தில் ஈடுபட்டனர். சங்க மாவட்ட தலைவர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பரம-சிவம் உட்பட பலர் கோரிக்கைகள் குறித்து பேசினர்.

தர்மபுரி மாவட்டத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் உள்ள, 5 குடோன்களில், 150 க்கும் மேற்பட்ட சுமை துாக்கும் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிபவர்களுக்கு இளஞ்சிவப்பு அட்டை வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு பச்சை அட்டை வழங்க வேண்டும். தற்காலிக பணியா-ளர்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும். பணியின் போது குடோன்களில் எதிர்பாராமல் ஏற்படும் விபத்துகளுக்கு, முதலுதவி பெட்டி வைக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு கழிப்பறை உட்பட அடிப்-படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். கடந்த, 15 ஆண்டுகளாக நடத்தாமல் உள்ள, சங்க அங்கீ-கார தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். தற்காலிக பணியாளர்களுக்கு, வருகை பதி-வேடு முறையை அமல்படுத்த வேண்டும். அனைத்து பணியாளர்களுக்கும், 60 சதவீத ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us