ADDED : ஜன 05, 2026 07:24 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா, கூர்க்-கம்பட்டியை சேர்ந்த மாதேஷ், 33, இவருடைய மனைவி அகிலா, 27, இத்தம்பதிக்கு ஆதீஷ், 10, சஷ்வந்த், 7 என இரு மகன்கள். இந்நிலையில், மாதேஷ் கூலி வேலைக்காக கர்நாடக மாநிலம் சென்றபோது, மனைவி மற்றும் மகன்களை அவ-ருடைய மாமியார் தனலட்சுமி வீட்டில் கடந்த மாதம் விட்டு சென்றார். கடந்த, 3 அன்று அகிலா மற்றும் இரு மகன்கள் ஆகியோர் மாயமாகினர். தனலட்சுமி புகார் படி, ஏரியூர் போலீசார் விசாரிக்-கின்றனர்.
பென்னாகரம் தாலுகா, மருவீட்டுபள்ளம் கிரா-மத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி வினோத்-குமார், 29. இவரது மனைவி திலகா, 26, இந்த தம்-பதிக்கு, 6 வயதில் ஒரு மகள், 4 வயதில் ஒரு மகன் உள்ளனர். கடந்த ஜன., 1 அன்று திலகா மாயமானார். கணவர் புகார் படி, பாப்பாரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்துள்ள, டொக்குபோதனஹள்ளியை சேர்ந்த, 16 வயது மாணவி, தர்மபுரி அருகே கடகத்துாரில் உள்ள ஐ.டி.ஐ.,யில் முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த டிச., 31 அன்று கல்லுாரிக்கு சென்றவர் மாயமானார். பெற்றோர் புகார் படி, தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

