ADDED : அக் 07, 2025 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர், அரூர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பின்புறம் தில்லை நகரை சேர்ந்த தேவராஜன் மனைவி தேவகி, 65. இவர், நேற்று காலை, 6:45 மணிக்கு நடைபயிற்சி மேற்கொள்வதற்காக அரூர் சிறு விளையாட்டு அரங்கிற்கு நடந்து சென்றார்.
அப்போது, பின்தொடர்ந்து பைக்கில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர், தேவகியின் கழுத்தில் இருந்த, ஐந்து பவுன் செயினை பறித்துக் கொண்டு மாயமாகினர். அரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.