/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அடுத்தடுத்து 3 கோவில்களில் நகை, காணிக்கை திருட்டு
/
அடுத்தடுத்து 3 கோவில்களில் நகை, காணிக்கை திருட்டு
ADDED : அக் 07, 2025 01:43 AM
தர்மபுரி, தர்மபுரி அருகே, சேலம்-தர்மபுரி சாலையில், இலக்கியம்பட்டி பஸ் ஸ்டாப்பில் சாலை மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. பூசாரி மற்றும் ஊர்மக்கள் கோவிலில் சென்று பார்த்தபோது, அம்மன் கழுத்தில் இருந்த தாலி உட்பட நாலரை பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது.
அதேபோல், செந்தில் நகர் பஸ் ஸ்டாப்பில் உள்ள புத்துநாகர் கோவில் கேட்டின் பூட்டை மர்மநபர்கள் உடைத்துள்ளனர். அமுதம் காலனியிலுள்ள மாரியம்மன் கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு, காணிக்கை திருட்டு போனது. தர்மபுரி நகர பகுதியை ஒட்டிய இடங்களில் தொடர் திருட்டு குறித்து, தர்மபுரி டவுன் போலீசார், கோவில்கள் அருகிலுள்ள, 'சிசிடிவி' கேமரா பதிவுகள் மற்றும் கைரேகை நிபுணர்கள் மூலம், கோவிலில் பதிவாகியுள்ள கைரேகைகளை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.