ADDED : மே 23, 2024 07:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி : தர்மபுரி அடுத்த, செந்தில் நகரிலுள்ள ராஜாஜி நீச்சல் குளத்தில், கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் நடந்து வருகிறது.
5 கட்டங்களாக நடந்து வரும் இந்த பயிற்சி முகாமில், ஏற்கனவே 4 கட்டங்களாக பயிற்சிகள் நடந்து முடிந்தது. இதில், 93 பெண்கள், 172 ஆண்கள் என, மொத்தம், 265 பேர் பயிற்சி பெற்றனர். இந்நிலையில், இறுதி கட்ட பயிற்சி முகாம் இன்று துவங்குகிறது. இதில், பெண்களுக்கு காலை, 9:00 முதல், 10:00 மணி வரை, 3 கட்டங்களாக பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. 5ம் கட்ட பயிற்சியில், ஆண்கள் யாரும் விண்ணப்பிக்கவில்லை. இன்று துவங்கி, 12 நாட்கள் நடக்கும் இப்பயிற்சிக்கு கட்டணமாக, 1,770 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. பயிற்சி பெறும் மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்.

