ADDED : ஜூலை 07, 2026 06:51 AM

அ நிறம் | அளவு
அரூர்; கடத்துார் அடுத்த ஒபிலிநாயக்கனஅள்ளி ஏரியில், பணம் வைத்து சூதாடுவதாக அரூர் தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று முன்தினம் மாலை, 6:30 மணிக்கு சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அங்கு பணம் வைத்து சூதாடிய துரிஞ்சிப்பட்-டியை சேர்ந்த மணிவண்ணன், 54, மேடுஅள்ளி முனுசாமி, 30, சோகத்துார் காமராஜ், 52, கசியம்-பட்டி கோவிந்தன், 44, கம்மாளம்பட்டி பெரிய-சாமி, 51, கே.வேட்ரப்பட்டி மாயக்கண்ணன், 41, ஆகிய, 6 பேரை கைது செய்தனர்.
மேலும், அவர்களிடமிருந்து, 2.13 லட்சம் ரூபாய், 10 மொபைல்போன்கள் மற்றும், 8 டூவீலர்களை பறிமுதல் செய்து, கோபிநாதம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.
