தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ மண் கடத்திய 3 லாரி பறிமுதல்

மண் கடத்திய 3 லாரி பறிமுதல்

மண் கடத்திய 3 லாரி பறிமுதல்


ADDED : ஜூலை 07, 2026 06:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 07, 2026 06:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரூர்; அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோடு தனியார் பள்ளி அருகில், நேற்று முன்தினம் அதி-காலை, 1:30 மணிக்கு கோபிநாதம்பட்டி எஸ்.ஐ., முனிராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, இரண்டு டிப்பர் லாரி-களில் அனுமதியின்றி நொரம்பு மண் ஏற்றி வந்து கொட்டி விட்டு சென்ற டிப்பர் லாரி ஓட்டுனர்கள், போலீசாரை கண்டதும் லாரியை விட்டு விட்டு தப்பியோடி விட்டனர். இதையடுத்து, 2 டிப்பர் லாரிகளையும், போலீசார் கைப்பற்றி ஸ்டேஷ-னுக்கு கொண்டு வந்தனர்.

* தர்மபுரி டவுன் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., வெங்கடேஷ்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மதியம், 2:00 மணிக்கு குமாரசாமிப்-பேட்டை மேம்பாலம் அருகே வாகன சோத-னையில் ஈடுபட்டார். அப்போது அவ்வழியாக வந்த கர்நாடக மாநில பதிவெண் கொண்ட டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 4 யூனிட் செம்மண் கடத்தி வந்தது தெரிந்தது. டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us