/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தொப்பூர் கணவாய் பகுதியில் ரூ.702 கோடியில் 6 வழிச்சாலை
/
தொப்பூர் கணவாய் பகுதியில் ரூ.702 கோடியில் 6 வழிச்சாலை
தொப்பூர் கணவாய் பகுதியில் ரூ.702 கோடியில் 6 வழிச்சாலை
தொப்பூர் கணவாய் பகுதியில் ரூ.702 கோடியில் 6 வழிச்சாலை
ADDED : பிப் 03, 2024 04:06 AM
தர்மபுரி: தர்மபுரி -சேலம் நெடுஞ்சாலை, என்.எச்., 44 தொப்பூர் கணவாய் பகுதியில், தொடர் சாலை விபத்துக்களை தவிர்க்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த, ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
இதில், விபத்துக்கான பிரதான காரணமான பகுதியில், வளைவுகளுடன் கூடிய அதி சாய்வான சாலை பகுதியாக உள்ள காரணத்தால், வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாவதாக தெரிவிக்கப்பட்டது. எனவே, 702 கோடி ரூபாய் செலவில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் திட்டமிடப்பட்டு, ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது. மேலும், ஒப்பந்த புள்ளிகள் இறுதி செய்யப்பட்டு, 3 ஆண்டு காலத்திற்குள் இப்பணியினை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் திட்டத்தில், தொப்பூர் கணவாய் மலைப்பகுதி சாலை, 6 வழிச்சாலையாக மாற்றி அமைக்கப்பட உள்ளது. தற்போது உள்ள தர்மபுரி - சேலம் இடதுப்புற சாலை மேம்பாலத்துடன், குறுகிய வளைவுகள் இன்றி விரிவாகத்துடன், 3 வழி சாலையாக அமைக்கப்படும். மேலும், தரைவழி பாலம் மற்றும் சர்வீஸ் சாலைகள் தொப்பூர், மேட்டூர் ஆஞ்சநேயர் கோவில் செல்வதற்கும் மற்றும் யூ வடிவில் கட்டப்பட
உள்ளன.
இந்த திட்ட பணிகளுக்காக தர்மபுரி மாவட்டத்தில், 2.7692 ஹெக்டேர், சேலம் மாவட்டத்தில், 1.7711 ஹெக்டேர் மற்றும் வனத்துறை, 13.427 ஹெக்டேர் நிலமும் கையகப்படுத்தப்பட உள்ளன. தற்காலிகமாக விபத்து தடுப்பு நடவடிக்கையாக, இரட்டை பாலத்தின் தர்மபுரி -- சேலம் இடது புற சாலையை, 5.50 மீட்டர் அகலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் எஸ்.பி.,ஸ்டீபன் ஜேசுபாதம், சேலம் திட்ட செயலாக்க அலகு திட்ட இயக்குனர் சீனிவாசலு, சேலம் திட்ட செயலாக்க அலகு மேலாளர் திலீப் வர்மா, நெடுஞ்சாலை இயக்க அலுவலர் ராம்குமாரன், சுங்கச்சாவடி மேலாளர் அருண்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

