/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வெவ்வேறு இடங்களில் சம்பவம் 2 மாணவியர் உட்பட 6 பேர் மாயம்
/
வெவ்வேறு இடங்களில் சம்பவம் 2 மாணவியர் உட்பட 6 பேர் மாயம்
வெவ்வேறு இடங்களில் சம்பவம் 2 மாணவியர் உட்பட 6 பேர் மாயம்
வெவ்வேறு இடங்களில் சம்பவம் 2 மாணவியர் உட்பட 6 பேர் மாயம்
ADDED : ஜன 30, 2026 04:46 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தின் வெவ்வேறு இடங்களில், கல்லுாரி மாணவியர் இருவர் உட்பட, 6 பேர் மாயமாகினர்.
தர்மபுரி அடுத்த குன்னிக்கொட்டாயை சேர்ந்தவர் அபிராமி, 20. குரும்பட்டியிலுள்ள டிபார்மென்ட் ஸ்டோரில் பணிபுரிந்து வந்தார். கடந்த, 27ல் வேலைக்கு சென்றவர் வீடு திரும்ப-வில்லை. தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.பென்னாகரம் அடுத்த சிடுவம்பட்டி சாம்பள்ளி காட்டு வளவை சேர்ந்தவர் ரசிகப்பிரியா, 22. இவர், இண்டூர் அருகேயுள்ள தனியார் கல்லுாரியில் டிப்ளமோ அக்ரி மூன்றாமாண்டு படித்து வந்தார். கடந்த, 27ல் காலை, 7:30 மணிக்கு கல்லுாரிக்கு சென்-றவர் வீடு திரும்பவில்லை. ஏரியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
பென்னாகரம் அடுத்த கே.அக்ரஹாரத்தை சேர்ந்தவர் தனுஷியா, 21. இவர், தர்மபுரியில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.எஸ்.சி., கார்டியாக்கேர் டெக்னாலஜி நான்காமாண்டு படித்து வந்தார். கடந்த, 27ல் காலை, 8:00 மணிக்கு கல்லுாரி சென்றவர் வீடு திரும்பவில்லை. ஒகேனக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.
பாலக்கோடு அடுத்த திம்மம்பட்டியை சேர்ந்த, 16 வயது சிறுமி, 10ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். கடந்த, 26ல் குடியரசு தினவிழாவிற்காக பேகாரஅள்ளி பள்ளிக்கு சென்றவர் மாயமானார். பாலக்கோடு போலீசார் விசாரிக்கின்றனர்.
அரூரை சேர்ந்தவர் மகாதேவன், 39. பொக்லைன் ஆப்ப-ரேட்டர். இவரது மனைவி சரசு, 27. இவர், அரூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்தார். தம்பதிக்கு ஸ்ரீனிதா, 6, என்ற மகள் உள்ளார். கடந்த, 25ல் வீட்டில் இருந்து சரசு, மகள் ஸ்ரீனிதா ஆகிய இருவரும் மாயமாகினர். அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

