நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தமிழ்நாடு பொறியாளர் கூட்டமைப்பு சார்பில், மத்திய அரசு பொறியாளர்களுக்கு இணையாக, தமிழக அரசின் துறை, வாரி-யங்கள் மற்றும் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் பொறியாளர்களுக்கும் ஊதிய விகிதம் நிர்ணயிக்கப்படும் என கடந்த தேர்தலின் போது, அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறை-வேற்ற வலியுறுத்தியும், பொறியாளர்களின் பணி நலன் மற்றும் பணி பாதுகாப்பு தொடர்பான, 6 அம்சக் கோரிக்கைகளை வலியு-றுத்தியும், வாயில் முழக்க கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
தர்மபுரி பழைய கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்-டத்திற்கு தலைவர் வீரமணி தலைமை வகித்தார்.இதில், பொறியாளர்களுக்கு மட்டும், 2017 முதல் மறுக்கப்-பட்டு வரும், 7வது ஊதியக்குழு ஊதிய பயன்களை உடனே அமல்படுத்த வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பப்பட்டன.

