/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வு 2,757 மையத்தில் 63,665 பேர் எழுதினர்
/
புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வு 2,757 மையத்தில் 63,665 பேர் எழுதினர்
புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வு 2,757 மையத்தில் 63,665 பேர் எழுதினர்
புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வு 2,757 மையத்தில் 63,665 பேர் எழுதினர்
ADDED : டிச 15, 2025 07:28 AM

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், எழுத படிக்க தெரியாத-வர்களுக்கு வழிகாட்டும், புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வை, 2,757 மையங்களில், 63,665 பேர் நேற்று எழுதினர்.
தமிழகத்தில் எழுத படிக்க தெரியாதவர்கள் அனைவரும் எழுத்தறிவு பெறும் நோக்கத்தில், புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தை தமிழக அரசு, 2022 முதல் செயல்படுத்தி வருகிறது. தினமும், 2 மணி நேரம் வீதம், 6 மாதத்திற்கு அனுபவம் மிக்க தன்னார்வலர்களை கொண்டு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இத்திட்டம் செயல்ப-டுத்தப்பட்டு வருகிறது. பயிற்சிகள் முடிந்த நிலையில், 2,757 மையங்களில் நேற்று நடந்த தேர்வில், 63,665 பேர் தேர்வெழுதினர். தேர்வு மைய பொறுப்பாளர்களாக தன்னார்வலர்கள், கண்காணிப்பாளர்களாக பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் செயல்பட்டனர். தமிழ், ஆங்கிலம், மற்றும் அடிப்படை கணிதம் ஆகிய பாடங்களில் தலா, 50 மதிப்பெண்கள் என, 150 மதிப்பெண்க-ளுக்கு தேர்வு நடந்தது.
இத்தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. தர்மபுரி ஒன்றியம், நாயக்கன் கொட்டாய் தொடக்கப்பள்ளி பள்ளியில் நடந்த தேர்வை, பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி திட்ட இணை இயக்குனர் பொன்குமார் பார்வையிட்டார். இதில், சி.இ.ஓ., ஜோதிசந்திரா, உதவி திட்ட அலுவலர் மஞ்சுளா, வட்டார கல்வி அலுவலர் கலைச்செல்வி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் முல்லைவேந்தன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மோகனப்பிரியா உட்பட பலர் உடனிருந்தனர்.

