ADDED : டிச 15, 2025 07:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: கர்நாடகா மாநிலம், பெங்களூரில் இருந்து நேற்று மதியம், ஆத்துாருக்கு தீவனம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றது. லாரியை ஆத்துாரை சேர்ந்த சிவசக்திவேல், 40, என்பவர் ஓட்டிச் சென்றார்.
அரூர்-சேலம் பைபாஸ் சாலையில், அரசு பிற்ப-டுத்தப்பட்டோர் மாணவர் விடுதி அருகில் வளைவில் சென்றபோது, பாரம் தாங்காமல் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையில் இருந்த சென்டர்மீடியனில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது.
இதில், அதிஷ்டவசமாக லாரி டிரைவர் காய-மின்றி உயிர் தப்பினார். சம்பவ இடத்திற்கு வந்த அரூர் போக்குவரத்து போலீசார் லாரியை அப்பு-றப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

