/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வனத்தில் மான் வேட்டையாடிய 7 பேருக்கு ரூ.2.65 லட்சம் அபராதம்
/
வனத்தில் மான் வேட்டையாடிய 7 பேருக்கு ரூ.2.65 லட்சம் அபராதம்
வனத்தில் மான் வேட்டையாடிய 7 பேருக்கு ரூ.2.65 லட்சம் அபராதம்
வனத்தில் மான் வேட்டையாடிய 7 பேருக்கு ரூ.2.65 லட்சம் அபராதம்
ADDED : ஏப் 08, 2024 07:19 AM
அரூர் : தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த காந்திநகரை சேர்ந்த வேலு என்பவரது வீட்டில், நேற்று முன்தினம் மாலை மொரப்பூர் வனத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, 3 கள்ள நாட்டுத்துப்பாக்கிகள், எக்ஸ்லேட்டர் ஒயர், கம்பி வலைகள், 15, வெட்டுக் கத்தி, 2, மான்கொம்பு, 4, கரிமருந்து மற்றும் பை போன்றவை கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து, வனத்துறையினர் வேலுவிடம் நடத்திய விசாரணையில், சந்திராபுரத்தை சேர்ந்த சின்னசாமி, கருத்தம்பட்டி ராஜ்குமார் ஆகியோர், மானை வேட்டையாடி, அதன் இறைச்சியை பாக்கெட் செய்து, பழையகொங்கத்தை சேர்ந்த செல்வம், கோவிந்தராஜ், கட்டரசம்பட்டி பாலன், அனுமன்தீர்த்தம் ராசக்கிளி ஆகியோருக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது.
மாவட்ட வனஅலுவலர் ராஜாங்கம் உத்தரவின்படி, வேலு, சின்னசாமி, ராஜ்குமார் ஆகிய, 3 பேருக்கும் தலா, 75,000 வீதம், 2.25 லட்சம் ரூபாயும், செல்வம், கோவிந்தராஜ், பாலன், ராசக்கிளி ஆகிய, 4 பேருக்கு தலா, 10,000 வீதம், 40,000 ரூபாய் என மொத்தம், 2.65 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

