/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வங்கதேச ஹிந்து உரிமை மீட்பு குழுவினர் 76 பேர் கைது
/
வங்கதேச ஹிந்து உரிமை மீட்பு குழுவினர் 76 பேர் கைது
வங்கதேச ஹிந்து உரிமை மீட்பு குழுவினர் 76 பேர் கைது
வங்கதேச ஹிந்து உரிமை மீட்பு குழுவினர் 76 பேர் கைது
ADDED : டிச 05, 2024 07:14 AM
தர்மபுரி: வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது நடத்தப்படும் வன்முறை தாக்கு-தல்கள் மற்றும் இன படுகொலையை
கண்டித்தும், ஹிந்து ஆல-யங்கள் தகர்க்கப்படுவதை கண்டித்தும், வங்கதேச ஹிந்து உரிமை மீட்பு குழு சார்பில்,
தர்மபுரி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு
அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தடையை மீறி நேற்று ஆர்ப்-பாட்டத்தில் ஈடுபட முயன்ற, வங்கதேச ஹிந்து
உரிமை மீட்பு குழுவினரை, போலீசார் கைது செய்ய முயன்றதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தர்மபுரி டி.எஸ்.பி.,
சிவராமன் தலைமையிலான போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற, 12 பெண்கள் உட்பட, 76 பேரை கைது செய்தனர்.