/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மான் வேட்டையாடிய 8 பேருக்கு அபராதம்
/
மான் வேட்டையாடிய 8 பேருக்கு அபராதம்
ADDED : பிப் 26, 2024 07:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி : நல்லம்பள்ளி அடுத்த பரிகம் காப்புக்காடு பகுதி, மலைப்ப நகர் காட்டுவளவு சரகத்தில் கடந்த, 4ல் மேல்பூரிக்கல்லை சேர்ந்த துரை, 45, என்பவர் மான் வேட்டையாடினார். அச்சமயத்தில் ரோந்து சென்ற வனத்துறையினரை பார்த்த, துரையுடன் இருந்த, 7 பேர் தப்பியோடினர். துரையை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், 8 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதில், பாக்யராஜ், 38, தமிழ்ச்செல்வன், 45, பெரியசாமி, 42, சதீஷ்குமார், 32, சித்தநாதன், 28, வீரசிம்மன், 50, ஜெய்சங்கர், 50, ஆகியோருக்கு, 10,000 முதல், 40,000 ரூபாய் வரை மொத்தம், 5.55 லட்சம் ரூபாய், மாவட்ட வன அலுவலர் உத்தரவுபடி,
அபராதம் விதிக்கப்பட்டது.

