ADDED : அக் 13, 2024 08:32 AM
தர்மபுரி: தர்மபுரியில், ஆயுத பூஜை நாளில் குவிந்த, 82 டன் குப்பை அகற்றப்பட்டது.தர்மபுரி நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. இதில், 18வது வார்டில் புறநகர் மற்றும் டவுன் பஸ்
ஸ்டாண்ட் உள்ளது. அதை சுற்றி வணிக நிறுவனங்கள், ஜவுளிக்கடைகள், இறைச்சி கடைகள்,
மொபைல்போன் கடைகள் என, பல கடைகள் உள்-ளன. இதில், நேற்று முன்தினம் ஆயுத பூஜை, நேற்று
சரஸ்வதி பூஜை கொண்டாடினர். இதற்காக, வாழை மரம், மா இலைகள், பூ மாலை, சாம்பல் பூசணி
உள்ளிட்டவை பூஜைக்கு பயன்படுத்தப்-பட்டன.இந்நிலையில், ஆயுத பூஜையையொட்டி, வியாபாரத்திற்காக தெரு ஓரங்களில் வாழை மரம்,
வெண் பூசணி, மா இலைகள் விற்-பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இவை அனைத்தும் விற்பனை
முடிந்தவுடன், மீதமானதை வியாபாரிகள் ஆங்காங்கே அப்படியே விட்டு சென்றனர். இதை
தர்மபுரி நகராட்சி நிர்வாகம் சார்பில் அப்புறப்படுத்தும் பணி நேற்று நடந்தது. இதில், நேற்று ஒரே
நாளில், 82 டன் குப்பை சேகரித்து அப்புறப்படுத்தியதாக, நக-ராட்சி ஊழியர்கள் தெரிவித்தனர்.