/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
டி.ஆர்.பி., தேர்வில் 86 பேர் 'ஆப்சென்ட்'
/
டி.ஆர்.பி., தேர்வில் 86 பேர் 'ஆப்சென்ட்'
ADDED : டிச 28, 2025 08:26 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், 5 மையங்களில் நேற்று நடந்த கல்லுாரி உதவி பேராசிரியர்களுக்கான டி.ஆர்.பி., தேர்வில், 86 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர்.ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லுாரிகளுக்கான உதவி பேராசிரியர் தேர்வு,- நேற்று தர்மபுரி மாவட்-டத்தில், 5 தேர்வு மையங்களில் காலை, மாலை என இரு வேளை நடந்தது. தேர்வுக்கு விண்ணப்-பித்த, 44 மாற்றுத்திறனாளிகள் உட்பட, 1,113 தேர்-வர்களில், 1,027 பேர் தேர்வெழுதினர். 86 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர்.
தேர்வு பணிகளில் ஆய்வு அலுவலர்களான சி.இ.ஓ., ஜோதிசந்திரா, மாவட்ட கல்வி அலுவ-லர்கள் மற்றும் துறை அலுவலர்கள், பறக்கும் படை உறுப்பினர்கள் மற்றும் அறை கண்காணிப்-பாளர்கள் என, 250க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

