/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வீடு புகுந்து கொள்ளையடித்த வழக்கு 9 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை
/
வீடு புகுந்து கொள்ளையடித்த வழக்கு 9 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை
வீடு புகுந்து கொள்ளையடித்த வழக்கு 9 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை
வீடு புகுந்து கொள்ளையடித்த வழக்கு 9 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை
ADDED : ஏப் 29, 2025 01:36 AM
தேன்கனிக்கோட்டை,:
தேன்கனிக்கோட்டை மற்றும் ராயக்கோட்டையில் வீடு புகுந்து கொள்ளையடித்த, 9 பேருக்கு, தலா, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, தேன்கனிக்கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே, தேவர் உளிமங்கலத்தை சேர்ந்தவர் பையாரெட்டி, 80. விவசாயி. இவரது வீட்டிற்குள் கடந்த, 2016 ஜூன், 23ம் தேதி இரவு புகுந்த மர்ம நபர்கள், பையாரெட்டி, அவரது மனைவி நாராயணம்மா, வீட்டு வேலைகாரன் ரமேஷ் ஆகியோர் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, தங்க நகைகள் மற்றும் 20,000 ரூபாயை கொள்ளையடித்து கொண்டு தப்பினர். தளி போலீசார் வழக்குப்பதிந்து, தேன்கனிக்கோட்டை அருகே முனியன்தொட்டியை சேர்ந்த சந்திரேஷ், 34, தாசரப்பள்ளி தீபக், 31, ஆறுப்பள்ளி விஜிகுமார், 32, ஒட்டர்பாளையம் முனிகிருஷ்ணா, 32, குருபரப்பள்ளி கோபாலகிருஷ்ணன், 31, சந்திஸ்குமார், 30, ஆகிய, 6 பேரை கைது செய்தனர்.
இதேபோல் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் காலுராம், 35. ராயக்கோட்டையில் எலெக்ட்ரிக்கல்ஸ் மற்றும் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டிற்குள் கடந்த, 2022 டிசம்பர், 22ம் தேதி புகுந்த, 3 பேர் கொண்ட கும்பல், குடும்பத்தினர் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, 4.50 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து கொண்டு தப்பியது. ராயக்கோட்டை போலீசார், ராஜஸ்தானை சேர்ந்த சங்காசிங், 22, சுரேந்திரசிங், 22, லட்சுமணராம், 35, ஆகிய, 3 பேரை கைது செய்தனர்.
இந்த இரு வழக்குகளும், தேன்கனிக்கோட்டை சார்பு நீதிமன்றத்தில் தனித்தனியாக நடந்து வந்தது. வழக்குகளை நேற்று விசாரித்த நீதிபதி ஹரிஹரன், பையாரெட்டி வீட்டில் கொள்ளையடித்த, 6 பேருக்கு தலா, 10 ஆண்டுகள் சிறை தண்டனை, 15,000 ரூபாய் அபராதம், கட்ட தவறினால் மேலும், 6 மாத சிறைதண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
அதேபோல், காலுராம் வீட்டில் கொள்ளையடித்த, 3 பேருக்கும் தலா, 10 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா, 10,000 ரூபாய் அபராதம், கட்ட தவறினால் மேலும், 6 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் ரவீந்திரநாத் ஆஜராகினார்.