/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தெருக்கூத்து பார்க்க சென்ற கட்டட மேஸ்திரி படுகொலை
/
தெருக்கூத்து பார்க்க சென்ற கட்டட மேஸ்திரி படுகொலை
ADDED : செப் 20, 2024 02:45 AM
தர்மபுரி: நல்லம்பள்ளி அருகே, தெருக்கூத்து பார்க்கச் சென்ற கட்டட மேஸ்திரி, கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே தண்டுகாரம்பட்டியை சேர்ந்தவர் சிவபிரகாசம், 47, கட்டட மேஸ்திரி. இவர் மனைவி பொன்னுருவி. இவர்களுக்கு, 3 மகள், 1 மகன் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே நடந்த, தெருக்கூத்து நிகழ்ச்-சியை பார்க்க சென்றவர், நேற்று காலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், வீட்டின் அருகே புதரில் உடலின் பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில், ரத்த காயங்களுடன் சடலமாக கிடந்தார். மாவட்ட எஸ்.பி., மகேஸ்-வரன், டி.எஸ்.பி., சிவராமன், தொப்பூர் இன்ஸ்பெக்டர் புவ-னேஸ்வரி ஆகியோர், சம்பவ இடம் சென்று விசாரணை நடத்-தினர். இதில், சிவபிரகாசத்தை கத்தியால் குத்தி கொலை செய்த பின், கயிற்றில் கட்டி, 200 மீட்டர் தொலைவிற்கு இழுத்து சென்று புதரில் வீசியது தெரியவந்தது. கொலை சம்பவம் சிவபிர-காசம் வீட்டின் அருகே நடந்துள்ளதால், சந்தேகத்தின் பேரில் அவரின் மனைவி மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.