ADDED : ஏப் 30, 2025 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாரண்டஹள்ளி:
தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அடுத்த, போயர்கொட்டாயை சேர்ந்த, கட்டட மேஸ்திரி சிவக்குமார், 42. இவருக்கு திருமணமாகி, மனைவி, 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
நேற்று முன்தினம் மதியம் அவர், மாரண்டஹள்ளி அருகே உள்ள,
திம்மேகவுண்டன் மடுவு ஆற்று பகுதியில் குளித்து கொண்டிருந்தவர், ஆற்றில் மூழ்கினார். பாலக்கோடு தீயணைப்பு துறையினர் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பின் நேற்று காலை, 10:00 மணிக்கு சிவக்குமாரின் சடலத்தை மீட்டனர். மாரண்டஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

