/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு உயிருடன் மீட்பு
/
கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு உயிருடன் மீட்பு
ADDED : நவ 15, 2024 02:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணற்றில் தவறி விழுந்த
பசு மாடு உயிருடன் மீட்பு
பாலக்கோடு, நவ. 15-
பாலக்கோட்டை சேர்ந்தவர் செல்வராஜ், 52. இவரது நிலத்தில், கறவை மாட்டை மேய்ச்சலுக்கு கட்டி வைத்திருந்தார். அப்போது கறவை மாடு அப்பகுதியில் இருந்த, 30 அடி ஆழ விவசாய கிணற்றில் தவறி விழுந்தது. அதை பார்த்த செல்வராஜ், பாலக்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி நிலைய அலுவலர் செல்வம் தலையில் வந்த தீயணைப்பு துறையினர், கிணற்றிலிருந்த கறவை மாட்டை உயிருடன் மீட்டனர்.