/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மினி லாரி மோதி பசுமாடு உயிரிழப்பு
/
மினி லாரி மோதி பசுமாடு உயிரிழப்பு
ADDED : மார் 14, 2024 01:34 AM
பாப்பிரெட்டிப்பட்டி,
கடத்துார் அடுத்த மணியம்பாடி, மாரியம்மன் நகரை சேர்ந்தவர் ஜெயராமன், விவசாயி; இவர், பசு மாடுகள் வளர்த்து வருகிறார்.
நேற்று, கடத்துார் தர்மபுரி மெயின் ரோட்டில், ரோட்டோரம் பசு மாடுகளை மேய்ச்சலுக்காக கட்டியிருந்தார். அப்போது, பொம்மிடியில் இருந்து தர்மபுரி நோக்கி வந்த மினி லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் மேய்ந்து கொண்டிருந்த பசு மாடுகள் மீது மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே, ஒரு பசு மாடு உயிரிழந்தது. மற்றொரு பசுமாட்டின், 2 கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மினி லாரி டிரைவர் படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

