/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயற்சித்த விவசாயி
/
கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயற்சித்த விவசாயி
கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயற்சித்த விவசாயி
கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயற்சித்த விவசாயி
ADDED : நவ 19, 2024 01:44 AM
தர்மபுரி, நவ. 19-
தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் சாந்தி தலைமையில் நேற்று, பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. காலை, 11:00 மணியளவில் வந்த வாலிபர் ஒருவர், கலெக்டர் அலுவலக வளாகத்தில், தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த டவுன் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி, விசாரித்தனர்.
அதில் அவர், பாலக்கோடு அருகே கசியம்பட்டியை சேர்ந்த விவசாயி தனமூர்த்தி, 45, என தெரிந்தது. அவரது, 2 ஏக்கர் நிலத்தை, அருகில் வசிக்கும் சிலர் அபகரிக்க முயன்றுள்ளனர். இதுகுறித்து, அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்பதால், அவர் தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை, போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.