/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
குடிபோதையில் கிணற்றில் விழுந்த மேஸ்திரி சாவு
/
குடிபோதையில் கிணற்றில் விழுந்த மேஸ்திரி சாவு
ADDED : அக் 02, 2024 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குடிபோதையில் கிணற்றில்
விழுந்த மேஸ்திரி சாவு
பென்னாகரம், அக். 2-
பென்னாகரம் அடுத்த கே.குள்ளாத்திரம்பட்டி காலனியை சேர்ந்தவர் நாகராஜ், 57. கட்டட மேஸ்திரி. நேற்று முன்தினம், பொச்சாரம்பட்டி பகுதியில் கட்டட பணிகளை முடித்து விட்டு, இரவு, 9:00 மணியளவில் மது போதையில்
வீட்டிற்கு புறப்பட்டார்.
புதுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி அருகே, விவசாய நிலம் வழியாக வந்தபோது, தவறி அங்கிருந்த கிணற்றுக்குள் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். நேற்று காலை ஒகேனக்கல் போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியோடு சடலத்தை மீட்டு, விசாரித்து
வருகின்றனர்.

