/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கச்சேரிமேட்டில் போக்குவரத்து சிக்னல் அமைக்க கோரிக்கை
/
கச்சேரிமேட்டில் போக்குவரத்து சிக்னல் அமைக்க கோரிக்கை
கச்சேரிமேட்டில் போக்குவரத்து சிக்னல் அமைக்க கோரிக்கை
கச்சேரிமேட்டில் போக்குவரத்து சிக்னல் அமைக்க கோரிக்கை
ADDED : செப் 27, 2024 01:32 AM
கச்சேரிமேட்டில் போக்குவரத்து
சிக்னல் அமைக்க கோரிக்கை
அரூர், செப். 27-
அரூர் கச்சேரிமேட்டில், சேலம், சென்னை, பெங்களூரு, திருவண்ணாமலை, தர்மபுரி, அரூர் டவுன் ஆகிய பகுதிகளுக்கு செல்லும், 4 வழிச்சாலை சந்திப்பு உள்ளது. இந்த சாலை வழியாக தினமும், பஸ், லாரி உள்ளிட்ட, 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்வதால், இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சாலையை கடக்க முடியாமல் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், விபத்துக்களும் அடிக்கடி ஏற்படுகிறது. எனவே, கச்சேரிமேட்டில் போக்குவரத்து சிக்னல் அமைக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.