/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ராகி தோட்டத்தில் ஒற்றை யானை முகாம்
/
ராகி தோட்டத்தில் ஒற்றை யானை முகாம்
ADDED : அக் 30, 2024 01:18 AM
ராகி தோட்டத்தில் ஒற்றை யானை முகாம்
ஓசூர், அக். 30-
தேன்கனிக்கோட்டை அருகே, ராகி தோட்டத்தில் முகாமிட்ட ஒற்றை யானையால், விவசாயிகள் அச்சமடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட நொகனுார் காப்புக்காட்டில், 10க்கும் மேற்பட்ட யானைகள், தங்கள் குட்டிகளுடன் முகாமிட்டுள்ளன. இந்நிலையில், கர்நாடகா மாநில வனப்பகுதியிலிருந்து வெளியேறிய, 10க்கும் மேற்பட்ட யானைகள், ஜவளகிரி வழியாக நொகனுார் காப்புக்காட்டிற்கு வந்துள்ளன. அதன்படி யானைகள் எண்ணிக்கை, 20 ஆக உயர்ந்துள்ளது. அவை, 3 குழுக்களாக பிரிந்து, நொகனுார், ஆலஹள்ளி, தாவரக்கரை ஆகிய பகுதிகளில் முகாமிட்டுள்ளன.
இரவில் வனப்பகுதியை விட்டு வெளியேறி, நொகனுார், மரக்கட்டா, தாவரக்கரை உட்பட பல்வேறு கிராமங்களுக்குள் புகுந்து, ராகி, அவரை, தக்காளி, பீன்ஸ், முட்டைகோஸ் போன்ற பல்வேறு விவசாய பயிர்களை நாசம் செய்கின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நேற்று மாலை மட்ட
மத்திகிரி என்ற கிராமம் அருகே,
கிரி என்ற பெயர் கொண்ட ஒற்றை ஆண் யானை, ராகி வயலில் இறங்கி, பயிர்களை தின்றும், காலால் மிதித்தும் நாசம் செய்தது. பகல் நேரத்தில் யானை விவசாய நிலத்திற்கு வந்ததால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்து ஓட்டம்
பிடித்தனர்.
பட்டாசு வெடித்து வனப்
பகுதிக்குள் யானையை வனத்துறையினர் விரட்டினர். மேலும், 3 குழுக்களாக முகாமிட்டுள்ள யானைகளை விரட்டும் பணி, நேற்றிரவு மேற்கொள்ளப்
பட்டது.