/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரி நகராட்சி எல்லையில் புகுந்த ஒற்றை யானையால் பொதுமக்கள் பீதி
/
தர்மபுரி நகராட்சி எல்லையில் புகுந்த ஒற்றை யானையால் பொதுமக்கள் பீதி
தர்மபுரி நகராட்சி எல்லையில் புகுந்த ஒற்றை யானையால் பொதுமக்கள் பீதி
தர்மபுரி நகராட்சி எல்லையில் புகுந்த ஒற்றை யானையால் பொதுமக்கள் பீதி
ADDED : மார் 05, 2024 12:00 PM
தர்மபுரி: பெண்ணை தாக்கிய ஒற்றை யானை, தர்மபுரி நகராட்சி எல்லை பகுதியில் புகுந்ததால், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வனப்பகுதியிலிருந்து கடந்த சில தினங்களுக்கு முன், வெளியேறிய ஒற்றை யானை காரிமங்கலம் அடுத்த, அண்ணாமலைஹள்ளி வழியாக சவுளுக்கொட்டாயில் புகுந்தது. அங்கு பயிர்களை நாசம் செய்த யானை, அதே பகுதியை சேர்ந்த, ஜெயஸ்ரீ, 20, என்பவரை தாக்கியது. அவர் படுகாயமடைந்தார்.
இந்நிலையில், அந்த ஒற்றை யானையை வனத்திற்குள் விரட்ட, அதன் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். நேற்று காலை, தர்மபுரி நகராட்சி எல்லைப்பகுதியான வேடியப்பன் திட்டு சனத்குமார் நதி பகுதியில், அந்த யானை புகுந்ததால், அப்பகுதி பொதுமக்கள் பீதியடைந்தனர்.
அப்போது வேடிக்கை பார்க்க வந்த மக்களை, ஒற்றை யானை விரட்டியது. வனத்துறையினர், 3 குழுக்களாக பிரிந்து, யானை குடியிருப்பு பகுதிகளில் புகாமல் இருக்க, தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கால்நடைகளை பாதுகாப்பாக வைத்திருக்க, பொதுமக்களுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.