/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஆதார் சேவை நிறுத்தம் பொதுமக்கள் அவதி
/
ஆதார் சேவை நிறுத்தம் பொதுமக்கள் அவதி
ADDED : மார் 13, 2024 02:40 AM
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவில், 4 வருவாய் உள் வட்டத்தில், 45 வருவாய் கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் இருந்து, பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் செயல்படும் ஆதார் சேவை மையத்திற்கு, பொதுமக்கள் தங்களின் ஆதார் புகைப்படம், மொபைல் எண், பெயர் திருத்தம், பிறந்த தேதி திருத்தம், முகவரி திருத்தம், கைரேகை பதிவு, கண்விழி பதிவு போன்ற பல்வேறு தேவைகளுக்காக, நுாற்றுக்கும் மேற்பட்டோர் வருகின்றனர்.
சேவை மையத்தில், காலை, 8:00 மணியிலிருந்து பொதுமக்கள் காத்திருக்கின்ற நிலை உள்ளது. ஆனால், சேவை மைய ஊழியர்கள் ஒரு நாளைக்கு, 40 பேருக்கு மட்டுமே எடுக்கப்படும் என, டோக்கன் கொடுக்கின்றனர். நீண்ட துாரத்தில் இருந்து வந்து காத்திருப்பவர்கள், திருப்பி அனுப்ப படுகின்றனர். காலை 10:00 முதல், 1:00 மணி வரை தான் சேவை மையம் இயங்குகிறது. இவ்வாறு செய்வதால், முதியோர், மாற்றுத்திறனாளிகள், தொலைதுாரத்தில் இருந்து வரும் மக்கள், கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.
பல நேரங்களில், ஆதார் சேவை மையம் செயல்படுவதில்லை. அச்சமயத்தில் தகவல் பலகையில், ஆதார் சேவை மையம் இன்று செயல்படாது என, நோட்டீஸ் ஒட்டி விட்டு சென்று விடுகின்றனர். ஆதார் சேவை மையத்தை, காலை முதல் மாலை வரை செயல்பட வைக்க, அதிகாரிகள் நடவடிக்கைக்கு, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

