தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தர்மபுரி மாவட்டத்தில் 16 தபால் நிலையங்கள் மூலம் ஆதார் சேவை

தர்மபுரி மாவட்டத்தில் 16 தபால் நிலையங்கள் மூலம் ஆதார் சேவை

தர்மபுரி மாவட்டத்தில் 16 தபால் நிலையங்கள் மூலம் ஆதார் சேவை


ADDED : ஜூலை 15, 2026 05:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 15, 2026 05:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தர்மபுரி':தர்மபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், வெளியிட்டுள்ள அறிக்கை:

தர்மபுரி அஞ் சல் கோட்டத்தில், தர்மபுரி தலைமை தபால் நிலையம், தர்மபுரி கலெக்டர் அலுவலகம், மாரண்டஹள்ளி, பாலக்கோடு, பென்னாகரம், நல்லம்பள்ளி, கம்பைநல்லுார், பாப்பிரெட்டிபட்டி, கடத்துார், பொம்மிடி, பாப்பாரப்பட்டி, பெரியானஹள்ளி, பாரூர், அரூர், மொரப்பூர், தீர்த்தமலை உள்ளிட்ட, 16 தபால் நிலையங்களில் பொதுமக்கள் ஆதார் சேவையை அலுவலக வேலை நேரங்களில் எளிதாக பெறலாம்.

புதிய ஆதார் பதிவு (பிறப்பு சான்றிதழ், பாஸ்போர்ட்) பெயர், முகவரி, பிறந்த தேதி, மொபைல் எண், இ-மெயில் உள்ளிட்ட விவரங்களை புதுப்பித்தல், கைரேகை மற்றும் கருவிழி புதுப்பித்தல், ஆதார் புகைப்படம் புதுப்பித்தல், விதிமுறைகளின்படி குழந்தைகளுக்கான கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் உள்ளிட்டவற்றிற்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

இதற்கு அசல் ஆவணங்களான, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, திருமணச் சான்றிதழ், பென்சனர் கார்டு, சாதிச் சான்றிதழ் பாஸ்போர்ட், வங்கி ஸ்டேட்மெண்ட் வங்கி மேலாளர் கையொப்பத்துடன், 3 மாதத்திற்கு உட்பட்ட மின்கட்டணம், குடிநீர் வரி ரசீது, காஸ் பில், பஞ்., தலைவர் அல்லது பஞ்., செயலர், நகராட்சி கவுன்சிலர், அரசு மருத்துவர் போன்றவர்களால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய இருப்பிட சான்று ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றுடன், ஆதார் சேவை வழங்கும் தபால் நிலையத்தை அணுகி மேற்கண்ட சேவைகளை, அனைத்து வேலை நாளிலும் எளிதாக பெறலாம். குறைவான கட்டணம் மட்டும் வசூலிக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us