/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு 'அபாகஸ்' புத்தகம்
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு 'அபாகஸ்' புத்தகம்
ADDED : டிச 08, 2025 08:51 AM

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 6, 7, 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, அவர்களின் கணித திறனை மேம்படுத்த, ஆசிரியர்கள் முயற்சி எடுத்-தனர்.
அதன்படி, கிருஷ்ணகிரி குட்வெல் அகாடமி சார்பில் மாணவர்களுக்கு, கணித திறனை மேம்-படுத்துதல் குறித்து, விழிப்புணர்வு மற்றும் பயிற்சி வழங்கப்பட்டது. இதில், மாணவர்களின் மனக்கணக்கு திறன், சிந்தனை ஆற்றல், வேகமான கணக்கீட்டு திறனை வளர்க்கும் வகையில், இந்த திட்டம் பள்ளியில் செயல்படுத்தப்பட்டது. பின் மாணவர்களுக்கு இலவசமாக, 'அபாகஸ்' சட்டம் மற்றும் பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் கலைவாணன், உதவி தலைமை ஆசிரியர் ரகு, கணினி ஆசிரியர் பார்த்திபன், பட்டதாரி
ஆசிரியர் ராஜாமணி, உடற்கல்வி ஆசிரியர் ஜெகஜீவன் ராம் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்களை பாராட்டி ஊக்குவித்-தனர்.

