/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்
/
ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ADDED : டிச 08, 2025 08:51 AM

ஒகேனக்கல்: தர்மபுரி மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தலமாக ஒகேனக்கல் உள்ளது. இங்கு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று காலை, 10:00 மணிக்கு நீர்வரத்து, 5,000 கன அடியாக இருந்ததால், அருவிகளில் தண்ணீர் சீராக கொட்-டியது. நேற்று ஞாயிற்றுக்கிழமை வாரவிடு-முறை என்பதால், ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 10,000க்கும் மேல் இருந்தது. அவர்கள், ஆயில் மசாஜ் செய்து கொண்டும், மெயின் பால்ஸ் மற்றும் காவிரியாற்றில் குளித்தும், ஒகேனக்கல்லில் பிரசத்தி பெற்ற மீன் குழம்பு சமைத்து சாப்பிட்டும் மகிழ்ந்தனர். மேலும், சின்னாறு பரிசல் துறையிலிருந்து, மெயின் அருவி, மணல் திட்டு வழியாக இயக்கப்-பட்ட பரிசல்களில் சவாரி செய்து, காவிரி-யாற்றின் எழில்மிகு அழகை கண்டு ரசித்தனர்.

