ADDED : அக் 16, 2025 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏரியூர்: ஏரியூர் ஒன்றியம், இராமகொண்ட அள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் மறைந்த ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். பள்ளி வளாகத்தில் அப்துல் கலாம் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஆசிரியர்கள், நல்லாசிரியர் சுப்ரமணி, பெருமாள் கோவிந்தராஜ், சுரேஷ், மாரா கவுண்டன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
* மொரப்பூர் பஸ் ஸ்டாண்டில், 'அனைத்து இந்திய கலாம் கனவு அறக்கட்டளை' சார்பில் நடந்த விழாவில், அப்துல் கலாமின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.