/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பாதாள சாக்கடை பணி முடிந்தும் மூடாத குழிகளால் விபத்து அபாயம்
/
பாதாள சாக்கடை பணி முடிந்தும் மூடாத குழிகளால் விபத்து அபாயம்
பாதாள சாக்கடை பணி முடிந்தும் மூடாத குழிகளால் விபத்து அபாயம்
பாதாள சாக்கடை பணி முடிந்தும் மூடாத குழிகளால் விபத்து அபாயம்
ADDED : ஜூன் 02, 2025 03:38 AM
தர்மபுரி: தர்மபுரி நகராட்சியில், மொத்தம், 33 வார்டுகள் உள்ளன. இதில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். குடியிருப்-புகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழி-வுநீர், சனத்குமார் நதி கால்வாய் மற்றும் ராமாக்காள் ஏரியில் கலப்-பதால் அவை அசுத்தமடைந்து வருகின்றன. இதை கருத்தில் கொண்டு, கடந்த, 2010ல், தி.மு.க., ஆட்சியில், தர்மபுரி நக-ராட்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம், 32 கோடி ரூபாய் மதிப்பில், முதற்கட்டமாக, 19 வார்டுகளில் பாதாள சாக்-கடை திட்டம் செயல்படுத்தப்பட்டது.
முதற்கட்ட பணிகள் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள, 14 வார்டுகளில், 82 கோடி ரூபாய் மதிப்பில், 2ம் கட்ட பாதாள சாக்-கடை திட்டப்பணிகள், துவங்கப்பட்டு நடந்து வருகிறது. இந்-நிலையில் முதற்கட்ட பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்-டிய குழிகள் மூடப்படாமல் உள்ளதால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
இது குறித்து, பொதுமக்கள் கூறியதாவது:
முதற்கட்ட பாதாள சாக்கடை திட்டத்தில், கழிவுநீரை ஒருங்கி-ணைத்து, மதிகோன்பாளையம் மற்றும் காந்திபாளையத்தில், கழி-வுநீர் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், தினமும், 38 லட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. அந்த கழிவுநீர் விவசாய பணிக்கு திருப்பி விடப்பட்டு வந்தது.
முதற்கட்ட பாதாள சாக்கடை திட்டம் முறையாக செயல்படுத்தா-ததால், நான்கு ரோடு கோல்டன் தெரு, பி.எஸ்.என்.எல்., அலுவ-லகம், நெசவாளர் காலனி உள்ளிட்ட இடங்களில், குழாய் உடைந்தும், அடைப்பு ஏற்பட்டும், பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறி, சாலை மற்றும் குடியிருப்பு பகுதி தெருக்களில் தேங்குகிறது.
ஒரு இடத்தில் சரி செய்தால், மற்றொரு இடத்தில் உடைப்பு ஏற்ப-டுகிறது. அதேபோல், குழாயில் அடைப்பு ஏற்படுவதால், மதி-கோன்பாளையத்தில் உள்ள ஏர்வால்வு குழாயில் எந்நேரமும் கழிவு நீர் வழிந்து, வழக்கம் போல் சனத்குமார் நதி கால்வாயில்
கலக்கிறது.
இதனிடையே, பாரதிபுரம், அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பல இடங்களில், பாதாள சாக்கடை கால்வாய் திட்டத்திற்காக தோண்-டிய குழிகள் சரியாக மூடப்படாமல் உள்ளன. இதனால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அடிக்கடி விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். மேலும், சிறிது மழை பெய்தால் கூட சாலை சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. எனவே, முதற்-கட்ட பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டிய குழிகளை மூட,
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.