/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தேர்தல் நடத்தை விதி மீறினால் நடவடிக்கை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் எச்சரிக்கை
/
தேர்தல் நடத்தை விதி மீறினால் நடவடிக்கை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் எச்சரிக்கை
தேர்தல் நடத்தை விதி மீறினால் நடவடிக்கை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் எச்சரிக்கை
தேர்தல் நடத்தை விதி மீறினால் நடவடிக்கை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் எச்சரிக்கை
ADDED : மார் 20, 2024 10:28 AM
அரூர்: அரூர் தாலுகா அலுவலகத்தில், லோக்சபா தேர்தலையொட்டி, அரூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, திருமண மண்டபம், அச்சகம், நகை மற்றும் நகை அடகு கடை உரிமையாளர்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து விளக்கும் வகையிலான கூட்டம் நேற்று நடந்தது.
இதில், அரூர் ஆர்.டி.ஓ., மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வில்சன் ராஜசேகர் தலைமை வகித்து பேசியதாவது: திருமண மண்டபங்களில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து தெரிவிப்பதுடன், அரசியல் கட்சியினர் நடத்தும் கூட்டங்களுக்கு முன் அனுமதி பெற வேண்டும். அச்சக உரிமையாளர்கள் தனி நபர் விரோத போக்கு, ஜாதி, மதம், இனம், மொழிக்கு எதிராக பிரச்னையை துாண்டும் தகவல்கள், மாற்று கட்சியினரை விமர்சிக்கும் செய்திகளை துண்டு பிரசுரங்கள், பேனர்கள் மற்றும் சுவரொட்டிகளாக அச்சடிக்கக் கூடாது.
அச்சடிக்கப்படும் துண்டு பிரசுரம், சுவரொட்டிகளில் அச்சகம் மற்றும் விளம்பரம் செய்பவரின் மொபைல் எண் குறிப்பிடப்பட்டு இருக்க வேண்டும். அடையாளமின்றி விளம்பரம் செய்யும் நபர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். நகை கடை மற்றும் நகை அடகு கடை உரிமையாளர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் அளிக்கும் டோக்கன், ரசீது ஆகியவற்றிற்கு எவ்விதமான பொருட்களும் வழங்கக்கூடாது. அனைத்து நிகழ்வுகளையும் தேர்தல் ஆணையமும், வருமான வரித்துறையும் கண்காணித்து வருகிறது. இவ்வாறு, அவர் பேசினார். கூட்டத்தில், டி.எஸ்.பி., ஜெகன்நாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

