/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பாலக்கோடு அரசினர் பாலிடெக்னிக் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை
/
பாலக்கோடு அரசினர் பாலிடெக்னிக் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை
பாலக்கோடு அரசினர் பாலிடெக்னிக் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை
பாலக்கோடு அரசினர் பாலிடெக்னிக் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை
ADDED : மே 23, 2024 07:17 AM
தர்மபுரி : தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் செயல்படும் அரசினர் பாலிடெக்னிக் கல்லுாரியில், 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது.இதுகுறித்து, கல்லுாரி முதல்வர் செல்வராணி வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில், அரசினர் பாலிடெக்னிக் கல்லுாரி செயல்பட்டு வருகிறது.
இதில், நடப்பு கல்வி ஆண்டுக்கான, 2ம் ஆண்டு மாணவர் நேரடி சேர்க்கை நடக்க உள்ளது. https/www.tnpoly.in என்ற இணைய தள முகவரி மூலம், தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். எனவே, பிளஸ் 2 தேர்ச்சி அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சியுடன், 2 வருட ஐ.டி.ஐ., படிப்பு படித்த மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும், முதலாமாண்டு சேர்க்கைக்கு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மேற்கண்ட முகவரியில் வரும், 24க்குள் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.