/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரூர் அருகே ஒரே திட்ட பணிக்கு அ.தி.மு.க., - தி.மு.க., பூஜை
/
அரூர் அருகே ஒரே திட்ட பணிக்கு அ.தி.மு.க., - தி.மு.க., பூஜை
அரூர் அருகே ஒரே திட்ட பணிக்கு அ.தி.மு.க., - தி.மு.க., பூஜை
அரூர் அருகே ஒரே திட்ட பணிக்கு அ.தி.மு.க., - தி.மு.க., பூஜை
ADDED : செப் 24, 2024 02:08 AM
அரூர்: ஆளுங்கட்சியாக இருந்தும், தர்மபுரி மாவட்டத்தில், தி.மு.க.,வில் எம்.எல்.ஏ.,க்கள் யாரும் இல்லாததால், வளர்ச்சி பணிகளை துவக்கி வைக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் அக்கட்சி-யினர் இருந்தனர்.
இந்நிலையில், நடந்து முடிந்த லோக்சபா தேர்-தலில், தர்மபுரியில் தி.மு.க., வேட்பாளர் மணி வெற்றி பெற்றார். இதையடுத்து, எம்.பி., என்ற முறையில் அவர் மாவட்டத்தில் விலையில்லா சைக்கிள் வழங்குவது, வளர்ச்சி திட்டப்பணிகளை
துவக்கி வைப்பது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இதனால், விலையில்லா சைக்கிள் வழங்குவது, வளர்ச்சி திட்டப்-பணிகளை துவக்கி வைப்பது மற்றும் பணி முடிந்த கட்டடங்-களை திறந்து வைப்பதில், தி.மு.க.,
மற்றும் அ.தி.மு.க.,வினர் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. இதன் உச்சகட்டமாக, அரூர் அடுத்த சிட்லிங் பஞ்.,ல் பிரதம மந்-திரி கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தில், 2.50 கோடி ரூபாய் மதிப்பில், சிட்லிங் முதல் மலைதாங்கி வரை தார்ச்சாலை அமைக்க கடந்த, 18ல் பூமி பூஜை
நடந்தது. இதில் அரூர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார் பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், அ.தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் பசுபதி, பஞ்., தலைவர் மாதேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்-டனர்.நேற்று
அதே பணிக்கு, சிட்லிங்கில் பூமி பூஜை நடந்தது. இதில், தர்மபுரி, தி.மு.க., - எம்.பி., மணி பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் சந்திர-மோகன், வேடம்மாள், சவுந்தரராசு மற்றும் நிர்வாகிகள்
பங்கேற்-றனர். ஒரே பணிக்கு, அ.தி.மு.க., மற்றும்- தி.மு.க.,வினர் அடுத்த-டுத்து போட்டி போட்டுக் கொண்டு நடத்திய பூமி பூஜை பொது-மக்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ளது.

