ADDED : அக் 18, 2024 02:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அ.தி.மு.க., செயல்வீரர் கூட்டம்
கம்பைநல்லுார், அக். 18-
தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுாரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், மொரப்பூர் மேற்கு ஒன்றியம் மற்றும் கம்பைநல்லுார் டவுன் பஞ்., அ.தி.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம், ஒன்றிய அவைத்தலைவர் ராமஜெயம் தலைமையில் நடந்தது. ஒன்றிய செயலாளர் மகாலிங்கம் வரவேற்றார்.
கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் வீரமணி, மாவட்ட செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ., மாநில விவசாய பிரிவு தலைவர் அன்பழகன், அரூர் எம்.எல்.ஏ., சம்பத்குமார் ஆகியோர் பேசினர். கம்பைநல்லுார் நகர செயலாளர் தனபால் உள்பட, பலர் கலந்து கொண்டனர்.