/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
14 ஆண்டுக்கு பின் கிராம சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை
/
14 ஆண்டுக்கு பின் கிராம சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை
14 ஆண்டுக்கு பின் கிராம சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை
14 ஆண்டுக்கு பின் கிராம சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை
ADDED : செப் 19, 2024 07:15 AM
தர்மபுரி: நல்லம்பள்ளி அருகே, பொதுமக்களின் தொடர் கோரிக்கையால், 14 ஆண்டுக்கு பின், கிராம சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நேற்று நடந்தது.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த, சாமிசெட்டிபட்டி பஞ்., சொரங்கப்பன்புதுாரில் இருந்து சந்தனுாரான் கொட்டாய் வரையிலான, 3.80 கி.மீ., நீளமுள்ள சாலை கடந்த, 14 ஆண்டுக-ளுக்கு முன் போடப்பட்டது. இதில், விவசாய பொருட்கள் ஏற்றி செல்லும் வாகனங்கள் மற்றும் பள்ளி கல்லுாரி வாகனங்கள் அதி-களவில் சென்று வந்ததால், சாலை சேதமடைந்தது. மக்களின்
தொடர் கோரிக்கையால், பிரதம மந்திரி கிராம சாலை மேம்-பாட்டு திட்டத்தில், சாலை அமைக்க, 2.62 கோடி ரூபாய் ஒதுக்கீடு
செய்யப்பட்டது. நேற்று சாலை பணியை, தர்மபுரி, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இதில், பா.ம.க., நிர்வாகிகள் சண்முகம், முருகன், அறிவு உள்-ளிட்டோர் கலந்து கொண்டனர்.