தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ அக்னிவீர் ஆட்சேர்ப்பு முகாம்

அக்னிவீர் ஆட்சேர்ப்பு முகாம்

அக்னிவீர் ஆட்சேர்ப்பு முகாம்


ADDED : ஆக 21, 2025 01:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2025 01:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி, அக்னிவீர் ஆட்சேர்ப்பு முகாமில், இளைஞர்கள் கலந்து கொள்வது குறித்து, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:இந்திய விமானப்படையில் அக்னிவீர் (ஓ.எஸ்) பணிக்கு ஆட்சேர்ப்பு முகாம், தாம்பரம் விமானப்படை வளாகத்தில், செப்., 2 மற்றும் 5ல் நடக்கவுள்ளது.

இதில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் ஆண், பெண் விண்ணப்பதாரர்கள் கலந்து கொள்ளலாம். அதற்கான தகுதிகளாக, பிளஸ் 2 வகுப்பில் ஆங்கிலம் மற்றும் பிற பாடங்களில், 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கான வயது வரம்பு, 2026 ஜன., 1 அன்று, 17 வயதுக்கு அதிகமாகவும், 21 வயதுக்கு குறைவாகவும் இருக்க வேண்டும். எனவே, தர்மபுரி மாவட்டத்தில் தகுதியுள்ள நபர்கள் ஆட்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us