தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/கோவில் வழிபாடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு

கோவில் வழிபாடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு

கோவில் வழிபாடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு


ADDED : அக் 02, 2026 02:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 02, 2026 02:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்: பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா கெரகோடஅள்ளியில், செல்லி-யம்மன் கோவில் உள்ளது.

இங்கு கடந்தாண்டு கும்பாபிஷேகம் நடக்கவிருந்த நிலையில், கெரகோடஅள்ளி மற்றும் தொப்பம்பட்-டியை சேர்ந்த இரு சமூகத்தினர் இடையே, கோவில் வழிபாடு தொடர்பான பிரச்னையில், கும்பாபிஷேகம் நிறுத்தப்பட்டது.இருதரப்பினருக்கும் இடையே, கடந்த ஆக., 25ம் தேதி அரூர்

ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த அமைதி பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று ஆர்.டி.ஓ., செம்மலை தலை-மையில், டி.எஸ்.பி., சதீஸ்குமார் முன்னிலையில், அரூர் ஆர்.டி.ஓ., ஆபீசில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதில், செல்லியம்மன் கோவில் கட்டுமானத்திற்கு ஆன செலவில், சி.தொப்பம்பட்டி கிராம மக்கள் பாதி பங்கை அளிக்க சம்மதம் தெரிவித்தனர். மேலும், சி.தொப்பம்பட்டி மற்றும் கெரகோட-அள்ளி ஆகிய இரண்டு கிராமங்களில் இருந்து, தலா, 7 பேர் கொண்ட குழு மூலம், கோவில் கட்டுமான செலவு விபரங்களை சரிபார்த்து, அதில், பாதி தொகையை, சி.தொப்பம்பட்டி கிராம மக்கள் அளித்த பின், கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த இருத-ரப்பினரும் ஒப்புக் கொண்டனர். அதுவரை கோவிலில் கும்பாபி-ஷேக நிகழ்வுகள் எதுவும் மேற்கொள்ள மாட்டோம், மீறினால், அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு கட்டுப்படுவோம் என, இரு கிராம மக்களும் ஒப்புக்கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us