ADDED : ஜன 09, 2025 08:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பென்னாகரம்:  பென்னாகரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரகாசனஅள்ளியில் கிராம அளவிலான வேளாண் முன்னேற்ற குழு குறித்த, விவசாயி-களுக்கான பயிற்சி, அட்மா திட்டத்தின் சார்பாக நடந்தது. பென்-னாகரம் வேளாண் அலுவலர் இந்துமதி தலைமை வகித்தார். முன்னோடி இயற்கை விவசாயி சிவக்குமார் இயற்கை விவசாய முறைகள், அதனால் ஏற்ப்படும் நன்மைகள் குறித்து பேசினார்.
உதவி வேளாண் அலுவலர் தமிழ்செல்வி வேளாண் துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் சொட்டுநீர் பாசன முறை மற்றும் அதன் பயன்கள் குறித்து எடுத்துறைத்தார். பயிர் காப்பீடு திட்டம் குறித்து விளக்கம் அளித்தார்.

